‘‘அஜித் ஸ்டைல் யாருக்கும் வராது!’’ - விஷ்ணுவர்தன்

‘‘அஜித் ஸ்டைல் யாருக்கும் வராது!’’ - விஷ்ணுவர்தன்

செய்திகள் 31-Jul-2013 9:47 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

அஜித், ஆர்யா, நயன்தாரா, டாப்ஸி ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘ஆரம்பம்’ திரைப்படத்தின் இயக்குனர் விஷ்ணுவர்தன் தந்த பேட்டி இதோ...

‘‘ஆரம்பம் என்ற தலைப்பு எல்லோரையும் கவர்ந்துள்ளது. இந்தத் தலைப்புக்கான தாமதம் திட்டமிடப்பட்டது அல்ல. ஆனால், இந்த வரவேற்புக் கிடைக்க அந்தத் தாமதமும் ஒரு காரணம் என்பதும் மகிழ்ச்சிக்குரிய விஷயம்தான். இது ஒரு போராட்ட குணமுள்ள ஒரு தனி மனிதனின் கதை. கதையில் வரும் மற்ற கதாபாத்திரங்கள் அந்தப் பிரதான சூரியனைச் சுற்றி வரும் கோள்கள்தான். இந்தப் படத்திலும் அஜித் சார் ‘மங்காத்தா’ படம்போலவே நரை கலந்த தலைமுடியுடன்தான் நடிக்கிறார்.

அந்தப் படத்துக்கு முன்னரே அவரிடம் என் படத்துக்கு இந்த கெட்&அப்தான் வேண்டும் என்று கேட்டிருந்தேன். ஆனால், வெங்கட்பிரபு முந்திக் கொண்டார். இந்த ஸ்டைல் அவர் அளவுக்கு வேறு யாருக்காவது அமைந்து இருக்குமா என்றால் சந்தேகமே. இது ஒரு ஆக்ஷன் டிராமா... விறுவிறுப்பான வேகமான படம். எங்களது கூட்டணியில் உருவான ‘பில்லா’ படத்தை விட பல மடங்கு வேகமாக இருக்கும். அஜித் ரசிகர்களை மட்டுமின்றி எல்லாத் தரப்பு ரசிகர்களையும் கவரும் படமாக இருக்கும் என்பது நிச்சயம்’’ என்று நம்பிக்கை தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பாகுபலி 2 - பலே பலே பாடல் வீடியோ


;