வதந்திகளை மறுத்த கனகா!

வதந்திகளை மறுத்த கனகா!

செய்திகள் 30-Jul-2013 5:45 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

நடிகை கனகா புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கேரளா, ஆலப்புழாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும், அந்த சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் இன்று இறந்து விட்டதாகவும் தமிழகத்தின் பெரும்பாலான ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வந்தன!

இந்த நிலையில் கனகா தனது உடல் நிலை குறித்து வெளியான வதந்திகள் அனைத்தையும் மறுத்து தான் நலமுடன் உள்ளதாக சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனது இல்லத்திலிருந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்துள்ளார்.

தன்னை தொடர்பு கொண்டு உண்மை நிலையை யாரும் அறிந்துகொள்ளாமல் தவறான செய்திகளைப் பரப்பியது வருத்தமளிக்கிறது என்றும் தெரிவித்துள்ளார். ஆலப்புழாவில் தான் சிகிச்சை பெற்று வந்ததாக வந்த தகவல்களையும் அவர் மறுத்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தலைமுறைகள்


;