மம்முட்டியுடன் ‘தில்லு முல்லு’ ஹீரோயின்!

மம்முட்டியுடன்  ‘தில்லு முல்லு’ ஹீரோயின்!

செய்திகள் 30-Jul-2013 4:06 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

மலையாளத்தின் பிரபல எழுத்தாளர் வைக்கம் முகம்மது பஷீர். இவர் எழுதிய ‘பால்யகால சகி’ என்ற நாவல் ஏற்கனவே, அதாவது 1967-ல் பிரேம் நசீர் மற்றும் ஷீலா நடிப்பில் ’பால்யகால சகி’ என்ற பெயரிலேயே சினிமாவாக வந்து மாபெரும் வெற்றி பெற்றது. கிட்டத்தட்ட 45 வருடங்களுக்குப் பிறகு அந்த நாவல் மீண்டும் அதே பெயரில் திரைப்படமாகிறது. இதில் மம்முட்டி தந்தை - மகன் என இரண்டு வேடங்களில் நடிக்க, இஷா தல்வார் அவருக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார்.

அந்த நாவலை இந்த காலத்துக்கு ஏற்ற மாதிரி திரைக்கதை அமைத்து, இயக்கவிருப்பவர் பிரமோத் பய்யன்னூர். ஏற்கெனவே, வைக்கம் முகம்மது பஷீர் எழுதிய, ‘மதிலுகள்’ என்ற நாவல் அதே பெயரில் திரைப்படமாகியுள்ளது. இந்த படத்தில் நடித்த மம்முட்டிக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் கிடைத்தது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கெத்து - தில்லு முல்லு பாடல் வீடியோ


;