படமாகும் பிரபல ஆன்மீகவாதியின் வாழ்க்கை வரலாறு!

படமாகும் பிரபல ஆன்மீகவாதியின் வாழ்க்கை வரலாறு!

செய்திகள் 30-Jul-2013 3:24 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

கேரளாவை தலைமையிடமாகக் கொண்டு தனது பக்தர்களுக்கும், சீடர்களுக்கும் ஆசி வழங்கி வரும் ஆன்மீகவாதி மாதா அமிர்தானந்த மயி. இவரது வாழ்க்கை வரலாறு ‘அம்மா’ என்ற பெயரில் உலக தரத்தில் திரைப்படமாகிறது. மலையாளம் மற்றும் ஆங்கில மொழிகளில் உருவாக இருக்கும் இந்தப் படத்தை பிரபல ஃப்ரெஞ்சு திரைப்பட தயாரிப்பாளரும், அமிர்தானந்த மயியின் தீவிர பக்தருமான மானுவல் கொளாஸ் டிலா ரோஷே தயாரிக்கிறார்.

இந்தப் படத்தில் பல ஹாலிவுட் பிரபலங்களும், மலையாள திரையுலக பிரமுகர்களும் கை கோர்க்க உள்ளனர். ஆனால், இந்தப் படத்தை இயக்கும் பொறுப்பு பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஒருவரிடம் வழங்க இருக்கிறார் தயாரிப்பாளர் மானுவல். அமிர்தானந்த மயிக்கு உலகம் முழுக்க பக்தர்கள் இருக்கிறார்கள். அவரது பக்தர்களும், சீடர்களும் அவரை ‘அம்மா’ என்று அழைப்பதால் படத்திற்கு ‘அம்மா’ என்று டைட்டில் வைத்திருக்கிறார்கள்.

அமிர்தானந்த மயி கேரக்டரில் நடிப்பதற்கான நடிகையின் தேர்வு நடந்து வர, ‘அம்மா’வின் பிறந்த நாளான செப்டம்பர் 27-ஆம் தேதி படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது. படத்தின் கிளைமேக்ஸில் நிஜ அமிர்தானந்த மயி தோன்றும் விதம் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறதாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;