ஐந்து இசை அமைப்பாளர்கள் இணையும் ‘பிரியாணி’ பாடல்!

ஐந்து இசை அமைப்பாளர்கள் இணையும் ‘பிரியாணி’ பாடல்!

செய்திகள் 30-Jul-2013 3:00 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘மங்காத்தா’வின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, வெங்கட் பிரபு இயக்கியுள்ள படம் ‘பிரியாணி’. இந்தப் படத்தில் கார்த்தி, ஹன்சிகா மோத்வானி ஜோடியாக நடித்திருக்க, படத்தின் ஷூட்டிங் முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் படு பிசியாக நடந்து வருகிறது. ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.

இவர் இசை அமைக்கும் 100வது படம் என்ற பெருமையையும் பெறும் இந்தப் படத்திற்காக சமீபத்தில் ஸ்பெஷல் பாடல் ஒன்றை பதிவு செய்துள்ளனர். ‘பிரியாணி’யின் சுவையை கூட்டும் விதமாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் பாடலை யுவன் சங்கர் ராஜா இசையில், இசை அமைப்பாளர்கள் டி.இமான், ஜி.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி, எஸ்.தமன் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். வருகிற செப்டம்பர் 6ஆம் தேதி, ‘பிரியாணி’ திரைக்கு வர இருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மேயாத மான் - தங்கச்சி பாடல் வீடியோ


;