தொடரும் கூட்டணி!

தொடரும் கூட்டணி!

செய்திகள் 30-Jul-2013 2:32 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

தெலுங்கின் இளம் முன்னணி நடிகர் நாக சைதன்யா. இவர் தனது தந்தை நாகார்ஜுனா மற்றும் தாத்தா நாகேஸ்வர ராவுடன் இணைந்து நடித்து வரும் படம் ‘மனம்’. விக்ரம் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்புகள் ஜெட் வேகத்தில் நடந்துகொண்டிருக்கிறது. பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் இந்தப் படத்தைத் தொடர்ந்து நாக சைதன்யா, ‘குண்டே ஜாரி கல்லந்தாயிந்தே’ படத்தை இயக்கிய கொண்ட விஜய குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்.

வருகிற அக்டோபர் மாதம் படப்பிடிப்பு துவங்கவுள்ள இப்படத்தில் ‘மனம்’ படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக நடிக்கும் சமந்தாவே ஜோடியாக நடிக்க இருப்பதாக டோலிவுட்டில் பேசப்படுகிறது. ”மனம்’ படத்தைத் தொடர்ந்து இந்த படத்தையும் நாகார்ஜுனாவின் ‘அன்னபூர்ணா ஸ்டுடியோ’ நிறுவனமே தயாரிக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

முப்பரிமாணம் - டீசர்


;