மலையாளத்தில் ஒரு விஸ்வரூபம்!

மலையாளத்தில் ஒரு விஸ்வரூபம்!

செய்திகள் 30-Jul-2013 12:46 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

படப்பிடிப்பு துவங்கிய காலத்திலிருந்தே விவாதங்களுக்கும், விமர்சனங்களுக்கும் உள்ளான மலையாள படம் ப்ளஸ்ஸி இயக்கியிருக்கும் ‘களிமண்’. பெண்ணாக பிறப்பவளின் வாழ்க்கையில் நடைபெறும் இயற்கையான பரிணாமங்களை சித்தரித்து எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் கதையின் நாயகியாக ஸ்வேதா மேனன் நடித்திருக்க, படத்துக்காக அவரது நிஜ பிரசவத்தையும் படம் பிடித்திருக்கிறார்கள்.

இது சம்பந்தமாக பல சர்ச்சைகள் எழுந்தாலும், படம் சென்ஸாருக்கு சென்று, எந்த ‘கட்’டும் இல்லாமல் படத்துக்கு ‘யு/ஏ’ சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ள படக்குழுவினருக்கு மீண்டும் ஒரு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. அதாவது, படத்திலிருந்து ஸ்வேதா மேனனின் பிரசவ காட்சிகளை நீக்கம் செய்யாமல் படத்தை திரையிட மாட்டோம் என்று ‘கேரளா ஃபிலிம் எக்ஸிபிட்டர்ஸ் அசோஸியேஷன்’ அறிவித்துள்ளது.

இது குறித்து அந்த அமைப்பின் தலைவர் லிபர்ட்டி பஷீர், ‘’இந்த படம் ஆரம்பித்த காலத்திலிருந்தே பல சர்ச்சைகளுக்கு உள்ளாகியிருக்கிறது. அரசியல் பிரமுகர்கள் உட்பட பலர் இந்த படத்தை விமர்சித்துள்ளனர். அதனால் இந்த படத்தை விமர்சித்த அத்தனை பேருக்கும் திரையிட்டு காண்பிக்க வேண்டும். ஸ்வேதா மேனன் சம்பந்தப்பட்ட பிரசவ காட்சிகளை படத்திலிருந்து நீக்க வேண்டும். இல்லையென்றால் இந்தப் படத்தை திரையிட மாட்டோம்’’ என்று கூறியிருக்கிறார்.

சென்ஸார் அனுமதி அளித்தும், படத்தை வெளியிட அனுமதிக்காமல், பல விமர்சனங்களுக்கும், சர்ச்சைகளுக்கும் உள்ளாகி பிறகு ரிலீஸான சமீபத்திய தமிழ் படம் கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்’. இந்த படத்துக்கு ஏற்பட்ட பிரச்சனை போன்று இப்போது ‘களிமண்’ பட பிரச்சனையும் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது..

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;