ஹாலிவுட்டுக்குப் போகும் மேடி!

ஹாலிவுட்டுக்குப் போகும் மேடி!

செய்திகள் 30-Jul-2013 11:30 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

தென்னிந்திய மொழி படங்கள் மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து விட்டால் அடுத்து ஒரு ஹாலிவுட் படத்திலாவது நடிக்க வேண்டும் என்பதுதான் பெரும்பாலான கலைஞர்களின் இலக்காக இருக்கும். ஆனால் அது போன்ற சந்தர்ப்பம் ஒரு சிலருக்குத்தான் கிடைக்கும். அப்படிப்பட்ட ஒரு வாய்ப்பு நமது ’மேடி’க்கு கிடைத்திருக்கிறது.

மாதவன் நடித்த ‘3 இடியட்ஸ்’ ஹிந்தி படத்தை பார்த்திருக்கிறார் பிரபல ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் சைமன் வெஸ்ட். இந்த படத்தில் மாதவனின் நடிப்பால் கவரப்பட்ட சைமன், அடுத்து தான் தயாரித்து, இயக்கவிருக்கும் ஆங்கில படத்தில் நடிக்க மாதவனுக்கு அழைப்பு விடுக்க, மாதவனும் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். பல ஆண்டுகளுக்கு முன் வெளியாகி வெற்றிபெற்ற ‘நைட் ஆஃப் தி லிவிங் டெட்’ என்ற படத்தின் ரீ-மேக் ஆக, 3டி தொழில்நுட்பத்தில் உருவாக இருக்கும் படமாம் இது. ‘டோம் ரைடர்’, ‘கான் ஏர்’, ‘எக்ஸ்பெண்டபிள்ஸ்’ போன்ற பல பிரம்மாண்ட படங்களை தயாரித்தவர் சைமன் வெஸ்ட் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்ல - டீசர்


;