பாலிவுட்டில் பிசியான தமிழ் இயக்குனர்!

பாலிவுட்டில் பிசியான தமிழ் இயக்குனர்!

செய்திகள் 30-Jul-2013 10:45 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளான பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நீதிமன்ற தீர்ப்பு படி இப்போது ஜெயில் தண்டனை அனுபவித்து வருகிறார் அல்லவா? கணவர் ஜெயிலில் இருந்தாலும் சஞ்சய் தத்தின் மனைவி மனியதா அவர்களுக்கு சொந்தமான திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை திறம்பட நடத்தி வருகிறாராம்.

தற்போது ‘ஹம்சுக் பிகாஸ் கயா’ என்ற படத்தை தயாரித்து வரும் இந்த நிறுவனம் அடுத்து, பிரபு தேவா இயக்கத்தில் ஒரு படத்தை தயாரிக்க ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதாம். இந்தப் படத்தின் ஹீரோ, ஹீரோயின் யார் யார் என்பதெல்லாம் இன்னும் முடிவாகவில்லை. பிரபுதேவா தற்போது கமிட் ஆகியுள்ள படங்களை முடித்ததும் இந்தப் படத்தின் வேலைகளில் இறங்குவாராம்.

பிரபு தேவா-ஜி, எப்ப தமிழ் படம் இயக்க வருவீங்க?

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

போகன் - செந்தூரா வீடியோ


;