இசை கலைஞர்கள் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா!

இசை கலைஞர்கள் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா!

செய்திகள் 29-Jul-2013 11:10 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

சமீபத்தில் இசைக் கலைஞர்கள் சங்கத்திற்கு தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் இசை அமைப்பாளர் எஸ்.ஏ.ராஜ்குமார் தலைவராகவும், செயலாளராக டோமினிக் சேவியர், பொருளாளராக வி.ஆர்.சேகர், டிரஸ்ட் சேர்மேனாக பி.ஜி.வெங்கடேஷ், டிரஸ்ட் செயலாளராக டி.சங்கர்ன ஆகியோர் தேர்வாகியிருந்தனர்.

இவரகள் பதவியேற்கும் விழா நேற்று (28-7-13) சென்னையிலுள்ள இசை சங்க வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் பழம்பெரும் இசை அமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் கலந்துகொண்டு வெற்றிபெற்ற உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில் இயக்குனர் சங்க தலைவர் விக்ரமன், இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், பாடகர் மனோ, பெப்சி செயலாளர் ஜி.சிவா ஆகியோரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

பின்னணிப் பாடகி சின்மயி விழாவை தொகுத்து வழங்கினார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

;