தனுஷுக்கு ஜோடியான அமலா பால்!

தனுஷுக்கு ஜோடியான அமலா பால்!

செய்திகள் 29-Jul-2013 10:18 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குனர்களாக மாறியவர்கள் வரிசையில் புதிதாகச் சேர்ந்துள்ளார் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ். ‘பொல்லாதவன்’, ‘சிறுத்தை’, ‘ஆடுகளம்’, ‘3’, ‘எதிர்நீச்சல்’ உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய வேல்ராஜ், தனுஷ் நாயகனாக நடிக்கவிருக்கும் ஒரு படத்தை இயக்கவிருக்கிறார்.

தனுஷின் ‘வுண்டர்பார் ஃபிலிம்ஸ்’ தயாரிக்கும் இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக முதல் முறையாக அமலாபால் நடிக்கிறார். தனுஷின் ஆஸ்தான இசையமைப்பாளராகவே மாறிவிட்ட அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். விரைவில் இப்படத்தின் தலைப்போடு கூடிய ஃபர்ஸ்ட் போஸ்டர் வெளிவருமாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ரம் - டீசர்


;