காக்கியில் கலக்கி வரும் பிருத்திவிராஜ்!

காக்கியில் கலக்கி வரும் பிருத்திவிராஜ்!

செய்திகள் 27-Jul-2013 1:04 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஜித்து ஜோசஃப் இயக்கத்தில் பிருத்திவிராஜ் ஹீரோவாக நடித்துள்ள மலையாள படம் ‘மெம்மரீஸ்’. அடுத்த மாதம் ரம்லான் பண்டிகையன்று திரைக்கு வரவிருக்கும் இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார் பிருத்திவிராஜ். சமீபத்தில் திரைக்கு வந்து சூப்பர் ஹிட்டாகிய ‘மும்பை போலீஸ்’ மலையாள படம், ‘ஔரங்க சீப்’ ஹிந்தி படம் ஆகியவற்றிலும் காவல்துறை அதிகாரியாக தோன்றி நடித்திருந்தார் பிருத்திவிராஜ். இவருக்கு போலீஸ் கேரக்டர் ரொம்பவும் பொருந்துகிறது போலும்!<br/><br/> இல்லையென்றால் நடிக்கத் துவங்கிய குறுகிய காலத்திற்குள் 13 படங்களில் போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பாரா என்ன? தமிழில் இவர் போலீஸ் அதிகாரியாக நடித்த மணிரத்னத்தின் ‘ராவணன்’ படம் உட்பட பெரும்பாலான படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. பெரும்பாலான நடிகர்கள் தொடர்ந்து ஒரே மாதிரியான கேரக்டர்களில் நடிக்க யோசிக்கும் இந்த காலத்தில் வரிசையாக காக்கி வேடத்தில் தோன்றி நடித்து வெற்றிகளை குவித்து வரும் பிருத்திவிராஜ், ‘’ஒரு படத்தை பொறுத்தவரையில் கதைதான் ஹீரோ’’ என்று சொல்லாமல் சொல்லுகிறாரோ?

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;