விஸ்வரூப’த்திற்குப் பிறகு ‘திருமதி தமிழ்’!

விஸ்வரூப’த்திற்குப் பிறகு ‘திருமதி தமிழ்’!

செய்திகள் 27-Jul-2013 10:49 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

தற்போதைய சூழ்நிலையில் ஒரு படம் வெளியாகி இருபத்தி ஐந்து நாட்கள் தொடர்ந்து ஓடி விட்டாலே அது பெரிய வெற்றியாகவும், சாதனையாகவும் கொண்டாடப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில் ஒரு திரைப்படம் நூறு நாட்கள் தொடர்ந்து ஓடி சாதனை படைத்திருக்கிறது என்றால் ஆச்சர்யமாக இல்லையா?

அது போன்ற ஒரு ஆச்சர்யத்தை அமைதியாக ஏற்படுத்தியிருக்கிறது ‘திருமதி தமிழ்’ திரைப்படம்! ‘ராதே ஃபிலிம்ஸ்’ என்ற பேனரில், ராஜகுமாரன், தேவயானி தம்பதியர் தயாரித்து, நடித்து வெளியாகிய இப்படம் நூறாவது நாளை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது.

சென்னை சுற்று வட்டாரத்திலுள்ள சீனிவாசா, கோபிகிருஷ்ணா, லட்சுமி பாலா போன்ற மூன்று தியேட்டர்களில் தினசரி ஒரு காட்சியாக இப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது என்பதை பத்திரிகை விளம்பரம் மூலம் தெரியப்படுத்தியுள்ளனர் ராஜகுமாரன் – தேவயானி தம்பதியர். சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்று நூறு நாட்களை கடந்து ஓடிய கமல்ஹாசனின் ’விஸ்வரூபம்’ மற்றும் ’கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படங்களுக்கு பிறகு ராஜகுமாரன் – தேவயானியின் ‘திருமதி தமிழ்’ படம் தான் நூறு நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது என்பது கவனிக்க வேண்டிய வேண்டிய விஷயமல்லவா?


உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;