‘தலைவா’ விஜய் விளக்கம்!

‘தலைவா’ விஜய் விளக்கம்!

செய்திகள் 26-Jul-2013 11:46 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

விஜய், அமலா பால், சத்யராஜ் முதலானோர் நடித்து, ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள ‘தலைவா’ படம் அடுத்த மாதம் திரைக்கு வரவிருக்கிறது. இந்நிலையில், இப்படம் அரசியல் படம் என்றும், படம் சென்ஸார் ஆகி விட்டது என்றும் செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள படத்தின் இயக்குனர் ஏ.அல்.விஜய், ‘’தலைவா’ அரசியல் படமல்ல. ஒரு சராசரி மனிதன் எப்படி தலைவன் ஆகிறான் என்பதே படத்தின் கதை.

எல்லா தலைவர்களுக்கு பின்னாலும் ஒரு கதை இருக்கும். அது போன்றுதான் படத்தில் விஜய் ஏற்றிருக்கும் பாத்திரமும் படைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் பாடல்களும், டிரைலரும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ‘தலைவா’ சென்ஸார் ஆகி விட்டது என்று வரும் செய்திகள் தவறு. படத்தின் டிரைலர் மட்டும்தான் சென்ஸார் ஆகியுள்ளது. படத்தை சென்ஸார் அதிகாரிகள் இன்னும் பார்க்கவில்லை.

இன்னும் ஒரு சில தினங்களில் ‘தலைவா’ சென்ஸார் ஆகி விடும், படமும் ரிலீஸாகி விடும்’’ என்று கூறியிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சென்னை 28 II காட்சிகள் - வீடியோ


;