இமான் அண்ணாச்சியின் காமெடியில் அது வேற இது வேற!

இமான் அண்ணாச்சியின் காமெடியில் அது வேற இது வேற!

செய்திகள் 26-Jul-2013 11:23 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘’சென்னைக்கு வருபவர்கள் டாக்டராக, வக்கீலாக, நடிகராக, தொழிலதிபராக வரவேண்டும் என்ற கனவுகளோடு வருவார்கள். ஆனால் குருசாமி என்ற இளைஞன் சென்னைக்கு வருகிற காரணமே வேறு. அப்படி வந்தவனுக்கு காதல் வருகிறது. அந்த காதல் கை கூடி வருகிற நேரத்தில் செய்யாத கொலைக்கு குற்றவாளியாகிறான்.

அதன் பிறகு அவனது வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்கள் என்ன? அவனோட கனவு நிறைவேறியதா? என்பதை சொல்லும் காட்சிகள் தியேட்டரில் சிரிப்பு அலையை ஏற்படுத்தும்’’ என்கிறார் ’அது வேற இது வேற’ படத்தை இயக்கி வரும் எம்.திலகராஜன். இந்த படத்தை களிகை ஜி ஜெயசீலன் வழங்க, ‘ஜெனி பவர்ஃபுல் மீடியா’ நிறுவனம் சார்பாக பெல்சி ஜெயசீலன் தயாரிக்கிறார்.

இந்த படத்தில் புதுமுகங்கள் வர்ஷன், சானியா தாரா ஜோடியாக நடிக்க, முக்கிய பாத்திரம் ஒன்றில் இமான் அண்ணாச்சி நடிக்கிறார். இவரது காமெடி படத்தில் களை கட்டுமாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தெரு நாய்கள் - டிரைலர்


;