இயக்குனர் பேரரசுக்குத் தடை!

இயக்குனர் பேரரசுக்குத் தடை!

செய்திகள் 25-Jul-2013 1:12 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

சென்ற 1990ஆம் ஆண்டு மம்முட்டி ஹீரோவாக நடித்து, ஜோமோன் இயக்கிய படம் ‘சாம்ராஜ்ஜியம்’. சந்தர்ப்ப சூழ்நிலையால் ’தாதா’வான ஒருவரின கதையை சொன்ன இந்தப் படம் மலையாளத்தில் மட்டுமல்லாமல் வேறு சில மொழிகளிலும் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. இப்போது அந்த படத்தின் தொடர்ச்சியாக ‘சன் ஆஃப் அலெக்ஸாண்டர் சாம்ராஜ்ஜியம் 2’ என்ற பெயரில் ஒரு படம் உருவாகியிருக்கிறது.

இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை முகம்மது ஷெஃபீக் குன்னுங்கல் எழுதியிருக்க, தமிழில் பல படங்களை இயக்கிய பேரரசு இயக்கியிருக்கிறார். அஜ்மல் ஹசன், பைஜு ஆதித்யன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தில் உன்னி முகுந்தன், ஆகன்ஷாபுரி ஜோடியாக நடித்திருக்கிறார்கள்: பிரம்மாண்டமான முறையில் உருவாகியிருக்கும் இப்படம மலையாளத்தில் ரிலீஸாகவிருந்த நேரத்தில், படத்தின் கதை உரிமை குறித்து இயக்குனர் பேரரசு, கதையாசிரியர் முகம்மது ஷெஃபீக் குன்னுங்கல் மற்றும் படத்தின் தயாரிப்பாளர்களுக்கிடையில் பிரச்சனை ஏற்பட்டு நீதிமன்றம் வரைக்கும் சென்றிருக்கிறார்கள்.

இந்நிலையில் இந்தப் படத்தை தமிழில் ‘திகார்’ என்ற பெயரில் இயக்குனர் பேரரசு வெளியிட முயற்சித்து வருவதை அறிந்த முகம்மது ஷெஃபீக் குன்னுங்கல், பேரரசு மற்றும் படத்தின் தயாரிப்பாளர்கள் மீது வழக்கு தொடர்ந்து படத்துக்கு ஸ்டே ஆர்டர் வாங்கியிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இந்தியா பாகிஸ்தான் - ஒரு பொண்ண பார்த்தேன் மாமா வீடியோ சாங்


;