பிரசவ காட்சியை அனுமதித்த சென்ஸார்!

பிரசவ காட்சியை அனுமதித்த சென்ஸார்!

செய்திகள் 25-Jul-2013 12:43 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

படம் ஆரம்பித்த முதலே பல சர்ச்சைகளுக்கும், விவாதங்களுக்கும் உள்ளான மலையாள படம் ‘களிமண்’. பெண்ணாக பிறப்பவளின் வாழ்க்கையில் நடக்கிற இயற்கையான பரிணாமங்களை சித்தரிக்கும் இப்படத்தில் ஸ்வேதா மேனன் கதையின் நாயகியாக நடிக்க, இவரது கணவராக பிஜு மேனன் நடித்திருக்கிறார். இந்தப் படத்தை மலையாளத்தில் பல வித்தியாசமான கதைகளைக் கொண்ட, வெற்றி படங்களை இயக்கிய ப்ளஸ்ஸி இயக்கியிருக்கிறார்.

இந்தப் படத்தின் ஹைலைட்டாக, ஸ்வேதா மேனனின் நிஜ பிரசவத்தை, அவரது கணவர் அனுமதியுடன் மும்பையிலுள்ள ஒரு மருத்துவமனையில் நேரடியாக படம் பிடித்து பரபரப்புக்கு உள்ளானவர்கள் இயக்குனர் ப்ளஸ்ஸியும், ஸ்வேதா மேனனும்! படத்தின் ஷூட்டிங் முடிந்து, சென்ஸாருக்கு சென்ற இப்படத்தைப் பார்த்த (பெண்கள் உட்பட) தணிக்கைக் குழுவினர் படத்தில் எந்த ஒரு காட்சியையும் நீக்காம;ல் ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். ‘‘12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் தங்களது பெற்றோருடன் இந்தப் படத்தை பார்க்கலாம்’’ என்ற பரிந்துரையோடு படத்துக்கு சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள் சென்ஸார் அதிகாரிகள்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள படத்தின் இயக்குனர் ப்ளஸ்ஸி, ‘‘பெண்கள் அடங்கிய தணிக்கை குழுவினர் இந்தப் படத்தை பார்த்து எந்த ‘கட்’டும் சொல்லாமல் சான்றிதழ் வழங்கியிருப்பது எனது படைப்புக்கு கிடைத்த அங்கீகாரம் மட்டுமல்ல, ஆரம்பத்திலிருந்தே இந்தப் படத்தை பற்றி விமர்சித்து வந்தவர்களுக்கு சரியான ஒரு சாட்டை அடியும் கூட!’’ என்று சொன்னதோடு, ‘’எல்லாப் பெண்களும் இந்தப் படத்தை பார்க்க வேண்டும்’’ என்றும் கூறியிருக்கிறார்.

சென்ஸாரின் அனுமதி, கேரளாவில் இப்படம் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது !

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இணையதளம் - டிரைலர்


;