‘விஸ்வரூபம் 2’வில் ‘நான் ஈ’ ஹீரோ!

‘விஸ்வரூபம் 2’வில் ‘நான் ஈ’ ஹீரோ!

செய்திகள் 25-Jul-2013 12:23 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘வெப்பம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நானி, ‘நான் ஈ’ படத்தில் ஹீரோவாகவும், ‘நீதானே என் பொன்வசந்தம்’ படத்தில் கெஸ்ட் ரோலிலும் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் அனைவருக்கும் தெரிந்த பிரபலம் ஆனார்.

தற்போது தெலுங்கில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் நானி, ‘பேன்ட் பாஜா பாரத்’ ஹிந்திப் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில், ‘விஸ்வரூபம் 2’ படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு மிக அருகிலேயே நடந்து கொண்டிருக்கிறது. கமலின் தீவிர ரசிகரான நானிக்கு இந்த விஷயம் தெரியவர, தன் ஆதர்ஷ நாயகன் உலகநாயகனை நேரில் சென்று பார்த்து ஆசிவாங்கி வந்திருக்கிறார்.

‘‘நான் சினிமாவுக்கு வந்ததுக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷனாக இருந்தது கமல் சார்தான். அவரை இன்று சந்தித்தபோது, நான் ஒரு குழந்தையைப்போல் எண்ணி மகிழ்ந்தேன். அதில் ஆச்சரியம் என்னவென்றால், என்னையும் அவருக்குத் தெரிந்திருக்கிறது என்பதுதான். ஸ்பாட்டில் இருந்தவர்களை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார் கமல் சார். அவருடன் போட்டோ எடுத்துவிட்டு, ஆட்டோகிராப்பும் வாங்கி வந்தேன். இப்போது வரை என்னால் இதை நம்பவே முடியவில்லை’’ என தன் அளவுகடந்த சந்தோஷத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் நடிகர் நானி.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அவள் - டிரைலர்


;