எல்லைகளைக் கடக்கும் தலைவா!

எல்லைகளைக் கடக்கும் தலைவா!

செய்திகள் 25-Jul-2013 11:22 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘தலைவா’ படத்தின் புரொடக்ஷன் வேலைகள் அனைத்தும் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்ட நிலையில், வருகிற ஆகஸ்ட் 9ம் தேதி ரம்ஜான் தினத்தன்று உலகமெங்கும் மிகப்பெரிய அளவில் வெளியிட இருக்கிறார்கள். இதுவரை எந்தத் தமிழ்ப்படமும் வெளியாகாத தியேட்டர்கள் எண்ணிக்கையில் ‘தலைவா’வை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறதாம் ‘ஸ்ரீ மிஸ்ரி புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம்.

தவிர ‘தலைவா’ படத்தை ஆந்திராவில் தெலுங்கிலும், கர்நாடகாவில் கன்னட மொழியிலும், வடமாநிலங்களில் ஹிந்தியிலும் ‘டப்’ செய்து வெளியிட இருக்கிறார்களாம். கேரளாவில் விஜய்க்கு மிகப்பெரிய ரசிகர் வட்டாரம் இருப்பதாலும், கேரளவாசிகளுக்கு தமிழ் புரியும் என்பதாலும் அங்கு மட்டும் தமிழிலேயே வெளிவருகிறது ‘தலைவா’. டப்பிங் படங்கள் பெரும்பாலும் சிட்டிகளில் மட்டுமே மற்ற மாநிலங்களில் வெளியாகும். ஆனால், ‘தலைவா’வை அந்தந்த மாநிலங்களின் சின்ன சின்ன ஊர்களிலும் வெளியிடவிருக்கிறார்களாம்.

இப்படத்தின் வெற்றியைப் பொறுத்து, தெலுங்கிலும் ஹிந்தியிலும் அம்மாநில பெரிய நடிகர்களை வைத்து ‘தலைவா’வை ரீமேக் செய்யும் ஐடியாவையும் வைத்திருக்கிறார்களாம்.

‘தலைவா’ இந்தியாவெங்கும் வலம் வருவார் போலிருக்கிறதே!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கரு - டிரைலர்


;