‘ஈரம்’ இயக்குனர் ரகசியத் திருமணமா?

‘ஈரம்’ இயக்குனர் ரகசியத் திருமணமா?

செய்திகள் 25-Jul-2013 10:32 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றி ‘ஈரம்’ படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்த அறிவழகன் ரகசியத் திருமணம் செய்து கொண்டார் என சமீபத்தில் இணையதளங்களில் செய்தி பரவியது. நகுல் ஹீரோவாக நடிக்கும் ‘வல்லினம்’ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் தற்போது பிஸியாக இருக்கிறார் அறிவழகன்.

வழக்கம்போல் ‘ஈரைப் பேனாக்கி, பேனை பெருமாளாக்கி’ய கதையாக, அறிவழகன் காதலித்து திருமணம் செய்ய இருப்பதைத்தான் இப்படி ‘ரகசியத் திருமணம் செய்துவிட்டார் அறிவிழகன்’ என செய்தி பரப்பி பரபரப்பு கிளப்பிவிட்டார்களாம். ‘ஈரம்’ படத்தில் சிறிய ரோலில் நடித்த ஹீரா என்பவரை கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தாராம் அறிவழகன். இந்நிலையில் இவர்களது திருமணம் வரும் செப்டெம்பர் மாதம் திருப்பதியில் நடக்க இருக்கிறது என்பதுதான் உண்மையாம்!

இன்னும் எத்தனை பேருக்கு ‘இப்படி’ நம்மாளுங்க கல்யாணம் பண்ணி வைப்பாங்கன்னு தெரியலை!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ரெமோ - சிரிக்காதே மியூசிக் வீடியோ


;