மீண்டும் சிவாஜி!

மீண்டும் சிவாஜி!

செய்திகள் 25-Jul-2013 10:38 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

கிட்டத்தட்ட ஐம்பது வருடங்களுக்கு முன்பு வெளியாகி சூப்பர்ஹிட்டான படம் ‘பாசமலர்’. ஏ.பீம்சிங் இயக்கிய இந்தப் படத்தில் சிவாஜி கணேசன், சாவித்திரி அண்ணன் தங்கையாக நடித்து பாசத்திற்கு புதிய இலக்கணம் படைத்திருந்தனர். தமிழ் திரைப்பட ரசிகர்களின் நெஞ்சங்களிலிருந்து என்றைக்குமே மாய்ந்து போகாத மகா காவியம் ‘பாசமலர்’. அந்தக் காலத்தில் கருப்பு - வெள்ளையில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தை இன்றைய புதிய தொழில்நுட்பச் சிறப்புக்களோடு கண்டு மகிழும் வாய்ப்பு விரைவில் கிடைக்கவிருக்கிறது.

ஆம், இந்தப் படம் ‘டிஐ’ என்னும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில், துல்லிய ஒலி - ஒளி அமைப்போடு, வண்ணப்படமாக வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. அதன் முன்னோட்டமாக இப்படத்தின் டிரைலர் வருகிற 29ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. சிவாஜி கணேசன் நடித்த ‘கர்ணன்’ என்ற காவியம் புதிய தொழில்நுட்பங்களுடன் புதுப்பொலிவோடு சமீபத்தில் வெளியாகி சக்கை போடுபோட்டது அனைவருக்கும் நினைவிருக்கலாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வீரசிவாஜி - டிரைலர்


;