இணைபிரியாத அஜித்தும் சிவாவும்!

இணைபிரியாத அஜித்தும் சிவாவும்!

செய்திகள் 25-Jul-2013 9:59 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

தங்கள் அபிமான நட்சத்திரங்களின் கதாபாத்திரப் பெயர்கள்கூட ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துவிடும். அதனால், ஒவ்வொரு படத்திலும் தங்கள் நாயகர்களின் கதாபாத்திரப் பெயர்களைப் பார்த்து பார்த்து வைப்பார்கள் இயக்குனர்கள். ஒருசில நடிகர்களுக்கு ஒரே பெயரே பல படங்களில் நிலைத்துவிடும். அப்படி அதிக படங்களில் அஜித்தின் கதாபாத்திரத்திற்கு சூட்டப்பட்ட பெயர் என்றால் அது ‘சிவா’தான்.

‘காதல் மன்னன்’, ‘வாலி’, ‘வில்லன்’, ‘வரலாறு’, ‘ஆழ்வார்’, ‘ஏகன்’, ‘அசல்’ என ஏற்கெனவே ஏழு படங்களில் ‘சிவா’ பெயரில் தல நடித்திருக்கிறார். தற்போது அவரின் 53வது படமான ‘ஆரம்பம்’ படத்திலும் அஜித்தின் பெயர் சிவாதானாம்.

இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் ‘அஜித்’ என்ற தனது சொந்தப் பெயரில் தல இதுவரை ஒரு படத்தில்கூட நடித்ததில்லை. (இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தில் மட்டும் அஜித் பெயரில் கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார்). ஆனால், விஜய் என்ற பெயரில் ஏற்கெனவே ‘ரெட்டை ஜடை வயசு’ படத்திலும், தற்போது ’சிறுத்தை’ சிவா இயக்கும் அஜித்தின் 54வது படத்திலும் நடிக்கிறார். அதேபோல் ‘சூர்யா’ என்ற பெயரில் ‘காதல் கோட்டை’ படத்தில் நடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால், விஜய்யும், சூர்யாவும் தங்களது பெயரிலேயே ஏழுக்கும் மேற்பட்ட படங்களில் இதுவரை நடித்திருக்கிறார்கள் என்பது இன்னுமொரு ஆச்சரியம்!

‘சிவ சிவா...’ எப்படியெல்லாம் டீடெய்ல் கொடுக்குறாய்ங்க!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;