அஜித் 53வது பட டைட்டில் இதுவா?

அஜித் 53வது பட டைட்டில் இதுவா?

செய்திகள் 24-Jul-2013 10:28 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஒரு சில படங்களுக்கு டைட்டில் வைத்தபிறகுதான் பிரச்சனைகள் முளைக்கும். ஆனால், அஜித்தின் 53வது படத்துக்கு டைட்டிலே வைக்காமல் பாடாய்ப் படுத்திக் கொண்டிருக்கிறார்கள். முதலில் ‘வலை’ என்ற பெயர் வலைதளங்களில் வலம் வந்தது. பின்னர், ‘பறவை’ என பரப்பிவிட்டார்கள். இந்த இரண்டுமே இல்லை ‘ஆட்டம் ஆரம்பம்’தான் படத்தின் டைட்டில் என இன்னொரு ரசிகர் வட்டாரம் கொளுத்திப் போட்டது.

ரசிகர்கள்தான் இப்படி பரபரப்பு கிளப்புகிறார்கள் என்றால், ‘சென்னை 28’ டீமும் இவர்களோடு களத்தில் குதித்து தற்போது அஜித் பட டைட்டிலை வைத்து ‘மங்காத்தா’ விளையாடிக் கொண்டிருக்கிறது. அஜித்தின் தீவிர ரசிகரான நடிகர் வைபவ் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘ஏ’ என்ற ஒரே ஒரு ஆங்கில எழுத்தை மட்டும் ‘ட்வீட்’ செய்ய, அதற்கு ‘எனக்குத் தெரியும்’ என ரிப்ளை செய்திருக்கிறார் இயக்குனர் வெங்கட் பிரபு!

‘ஏ’ என்பதற்கும், ‘எனக்குத் தெரியும்’ என்பதற்கும் அஜித் பட டைட்டில் ஆங்கில ‘ஏ’வில்தான் ஆரம்பிக்கும் என எப்படி முடிச்சுப்போட முடியும் என்கிறீர்களா? வெங்கட் பிரபு கடைசியாக செய்த ‘ட்வீட்’தான் இந்த டைட்டில் ரகளைக்குக் காரணம். ‘விரைவில் விஷ்ணுவர்தன் அறிவிப்பார்’ என கொளுத்திப் போட்டிருக்கிறாரே... இது போதாதா?

பத்த வச்சுட்டியே பரட்டை!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இந்திரஜித் - ட்ரைலர்


;