சாந்தனுவுக்கு கல்யாணமா?

சாந்தனுவுக்கு கல்யாணமா?

செய்திகள் 24-Jul-2013 10:23 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘சக்கரக்கட்டி’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான இயக்குனர் / நடிகர் பாக்யராஜின் மகன் சாந்தனுவின் வீட்டில் கல்யாணப் பேச்சை ஆரம்பித்துவிட்டார்களாம். பொண்ணு வேற யாரும் இல்லை... நம்ம ‘மானடா மயிலாட’ புகழ் கீர்த்தி தான்!

கீர்த்தியின் அம்மா ஜெயந்தி நடத்திக் கொண்டிருக்கும் டான்ஸ் ஸ்கூலுக்கு சாந்தனு அடிக்கடி வருவாராம். அப்படி வரும்போது அவருடன் ஏற்பட்ட நட்பு தற்போது கல்யாணப் பேச்சாக மாறியிருக்கிறதாம். இருவர் குடும்பங்களிலும் சாந்தனுவுக்கும் கீர்த்திக்கும் ‘கல்யாணப் பேச்சு’ நடைபெற்றுக் கொண்டிருப்பது உண்மையாம்.

ஆனால், இது காதல் இல்லை; நட்புரீதியிலான பேச்சுவார்த்தைதான் என ‘கிசுகிசு’க்களுக்கு இடம்தராமல் ஆரம்பத்திலேயே முற்றுப்புள்ளி வைத்து தங்களது உறவை தெளிவுபடுத்தியிருக்கிறார்கள் சாந்தனுவும் கீர்த்தியும்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பாம்பு சட்டை - வீடியோ


;