விஜய் ஆண்டனியின் இரட்டிப்பு மகிழ்ச்சி!

விஜய் ஆண்டனியின் இரட்டிப்பு மகிழ்ச்சி!

செய்திகள் 24-Jul-2013 10:18 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

இசையமைப்பாளராக இருந்து ‘நான்’ படத்தின் மூலம் ஹீரோவாகவும் அவதாரம் எடுத்து வெற்றிபெற்றவர் விஜய் ஆண்டனி. இந்தப் படத்தைத் தொடர்ந்து தற்போது ‘சலீம்’, ‘திருடன்’ என இரண்டு படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படங்களுக்கு இசையும் அவரே.

பல புதிய ராகங்களையும், மெட்டுக்களையும் அமைத்து ரசிகர்களின் நெஞ்சில் நீங்காத இடம்பிடித்த இசையமைப்பாளர் விஜய் ஆண்டனிக்கு இன்று காலை மலர்ந்த புதிய ராகம் ஒன்று நிச்சயம் அவரை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியிருக்கும். ஆம்... அழகிய பெண் குழந்தைக்கு தந்தை ஆகியிருக்கிறார் விஜய் ஆண்டனி. இந்த நாளில் இன்னொரு விசேஷமும் இருக்கிறது. விஜய் ஆண்டனிக்கும் இன்றுதான் பிறந்தநாள்!

அப்பாவுக்கும் பொண்ணுக்கும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அண்ணாதுரை - GST பாடல் வீடியோ


;