நடிகை மஞ்சுளா காலமானார்!

நடிகை மஞ்சுளா காலமானார்!

செய்திகள் 23-Jul-2013 12:43 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

நடிகர் விஜயகுமாரின் மனைவியும், நடிகையுமான மஞ்சுளா, சென்னையை அடுத்த ஆலபாக்கத்தில் வசித்து வந்தார். நேற்று, அவர் வீட்டில் உள்ள படுக்கை அறையில் கட்டிலில் இருந்து திடீரென்று கீழே விழுந்து, அவரது வயிற்று பகுதியில் பலத்த காயம் ஏற்பட, அவரை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், அந்த சிகிச்சை பலனளிக்காமல் அவர் இன்று காலமானார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என இந்தியாவின் பல மொழிகளில் எம்.ஜி.ஆர்., சிவாஜி உட்பட பல பெரிய நடிகர்களுடன் நடித்து, இந்திய சினிமாவின் புகழ்பெற்ற நட்சத்திரங்களில் ஒருவராக பிரகாசித்தவர் மஞ்சுளா. அந்த நட்சத்திரம் இப்போது நம்மிடமிருந்து மறைந்து வானில் பிரகாசிக்க சென்று விட்டார். நடிகை மஞ்சுளாவின் இழப்பு தமிழ் திரையுலகுக்கு மட்டுமல்ல; இந்திய சினிமாவுக்கே பேரிழப்பாகும்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

;