‘பிரியாணி’ ரெடி!

‘பிரியாணி’ ரெடி!

செய்திகள் 23-Jul-2013 12:16 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘அலெக்ஸ் பாண்டியன்’ படத்திற்குப் பிறகு கார்த்தி நடிக்கும் படம், ‘மங்காத்தா’ படத்திற்குப் பிறகு வெங்கட் பிரபு இயக்கும் படம், யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கும் 100-வது படம், கார்த்தி, ஹன்சிகா இணைந்து நடிக்கும் முதல் படம், ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் சார்பாக கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கும் படம் என ஏராளமான சிறப்புக்கள் உள்ள படம் ‘பிரியாணி’.

வெங்கட் பிரபுவின் வித்தியாசமான சமையலில் தயாராகி வந்த ‘பிரியாணி’யை ருசிக்கும் தருணம் நெருங்கிவிட்டது. ஆம், ’பிரியாணி’ படம் வருகிற செப்டம்பர் 6-ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. ஏற்கெனவே ’பிரியாணி’யின் சாம்பிள் டீசர் வெளியாகி, ர(ரு)சித்த நிலையில் விரைவில் பரிமாற இருக்கும் ‘பிரியாணி’ மீது இப்போதே ஏகப்பட்ட எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தீரன் அதிகாரம் ஒன்று - டிரைலர்


;