‘ஹேப்பி பர்த் டே துரைசிங்கம்’!

‘ஹேப்பி பர்த் டே துரைசிங்கம்’!

செய்திகள் 22-Jul-2013 10:27 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘எல்.கே.ஜி. படிக்கிற குழந்தையில் இருந்து 80 வயசு தாத்தா வரைக்கும் அனைவருக்கும் பிடித்த தமிழ் சினிமா ஹீரோக்கள் யார் யார்?’ என்று பட்டியலிட்டால் இவரின் பெயரும் அதில் முதல் வரிசையில் இடம்பிடிக்கும். ‘சிவகுமார் என்ற அற்புத கலைஞனின் மகன்’ என்ற ஒரேயொரு விசிட்டிங் கார்டோடு கோடம்பாக்கத்தில் காலடி எடுத்து வைத்த நடிகர் சூர்யா, அதன்பின்பு பதித்ததெல்லாம் தன் சொந்தக் காலடித் தடங்களே! முதல் ஆறு படங்களில் சாதாரணமாகச் சென்ற இந்த கோயம்புத்தூர் சரவணனின் சினிமாப் பயணத்தில், ‘ஃப்ரண்ட்ஸ்’ படத்திற்குப் பிறகு நடந்தவையெல்லாம் அசாதாரணமானவை. வெறும் 28 படங்களுக்குள்ளேயே ‘தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோ’ என்ற அந்தஸ்தைப் பெற்றதற்கு சூர்யாவின் கடின உழைப்பைத் தவிர வேறெதையும் காரணமாகச் சொல்ல முடியாது. ‘நேருக்கு நேர்’ படத்தில் சூர்யாவாக அறிமுகமாகி, சமீபத்தில் வெளிவந்து வசூலில் வீறுநடைபோட்டுக் கொண்டிருக்கும் ‘சிங்கம் 2’வில் துரைசிங்கமாக கர்ஜித்துக் கொண்டிருக்கும் சூர்யாவிற்கு இன்று (23-7-2013) பிறந்தநாள். வெற்றிமேல் வெற்றிகள் குவித்துக் கொண்டிருக்கும் சூர்யாவிற்காக இன்னும் நிறைய உயரங்கள் காத்திருக்கின்றன தமிழ் சினிமாவில்! இந்த சந்தோஷமான தருணத்தில் ரசிகர்களோடு சேர்ந்து நாமும் சொல்லலாம் உற்சாகமாக ‘ஹேப்பி பர்த் டே துரைசிங்கம்’!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சொடக்கு ஆடியோ பாடல்


;