தவிக்கும் ‘தங்க மீன்கள்’!

 தவிக்கும் ‘தங்க மீன்கள்’!

செய்திகள் 23-Jul-2013 11:42 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

கௌதம் மேனன் தயாரிப்பில் இயக்குனர் ராம் இயக்கி நடித்திருக்கும் ‘தங்க மீன்கள்’ படத்தின் ரிலீஸ் தேதி மாறிக் கொண்டேயிருக்கிறது. கடந்த மாதமே வெளியாக வேண்டிய அந்தப் படம் தியேட்டர்கள் சரிவரக் கிடைக்காததால் இதுவரை ரிலீஸாகவில்லை. தவிர, வரிசையாக பெரிய படங்களின் அணிவகுப்பும் இருப்பதால், தற்போதைய சூழலில் அந்தப் படத்திற்குத் தேவையான அளவு திரையரங்குகள் கிடைக்குமா என்பதும் சந்தேகம்தான்.

இந்நிலையில், ‘தங்க மீன்கள்’ படத்தின் இரண்டாவது டீஸர் நேற்று வெளியானது. படத்தின் காட்சிகளோடு பின்னணியில் இயக்குனர் ராமின் வலி மிகுந்த வார்த்தைகளும், ஒரு படைப்பாளியின் சோகக் குரலும், அந்த டீஸரைப் பார்த்தவர்களையெல்லாம் பதை பதைக்க வைக்கிறது.

‘‘சமயத்தில் பணம் இருந்திருந்தால் ‘தங்க மீன்கள்’ எப்போதோ திரைக்கு வந்திருக்கும்... பெரும் பணம் கைகளில் இருந்திருந்தால் ‘தங்க மீன்களி’ன் தட்டிகள் தெருவெங்கும் முளைத்திருக்கும்... பணமற்றவர்களின் வாழ்வை, அன்பை படமெடுப்பதற்கு கூட பெரும் பணம் தேவைப்படுகிறது என்பதுதான் நகைமுரண். பணம் பத்தும் செய்யும்தான்... ஆனால், ‘பணம் இல்லாதவங்களையெல்லாம் முட்டாள்னு நெனைக்காதீங்கடா’’ என்ற இயக்குனர் ராமின் குரல் கேட்பவர்களை நிலை குலைய வைக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தீரன் அதிகாரம் ஒன்று - டிரைலர்


;