கஸ்தூரி ராஜாவின் ‘காசு பணம் துட்டு’!

கஸ்தூரி ராஜாவின் ‘காசு பணம் துட்டு’!

செய்திகள் 23-Jul-2013 10:51 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘‘குடிசைப் பகுதிகளில் வாழும் மக்களை இந்த சமூகம் என்ன மாதிரியான நிலைமையில் வைத்திருக்கிறது, பிறக்கின்ற குழந்தைகள் எதுவும் கிரிமினலாக பிறப்பதில்லை, சூழ்நிலைதான் அவர்களை கிரிமினல்கள் ஆக்குகிறது. இவர்கள் வாழும் வாழ்க்கையில் தவறுகள் இல்லை.

ஆனால் தவறுகளே வாழ்க்கையாகிப் போவதுதான் கொடுமை. சுருக்கமாகச் சொல்வதென்றால் சென்னை நகரத்து பூங்கா புதர்களில், குடிசைகளில், நடைபாதையோரத்தில், ரயில் நிலையங்களின் மறைவிடங்களில் அடங்கிபோன கவிதைகள்...! இதுதான் ‘காசு பணம் துட்டு’ படத்தின் கதைக்களம். இது முழுக்க முழுக்க சென்னை குடிசைப் பகுதி மக்களின் யதார்த்த வாழ்க்கையைச் சித்தரிக்கும் படம்’’ என்கிறார் இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் கஸ்தூரி ராஜா.

தனுஷ் நடித்த ‘3’ படத்தைத் தொடர்ந்து ‘ஆர்.கே.புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் சார்பாக விஜயலட்சுமி கஸ்தூரி ராஜா தயாரிக்கும் இந்தப் படத்திற்கு முதலில் ‘அசுரகுலம்’ என்று பெயர் வைத்திருந்தனர். இதே பெயரில் மலையாளத்திலும் உருவாகும் இந்த படத்தில் மித்ரன என்ற புதுமுகம் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகிகளாக சானியா, சுயோசா ஆகிய புதுமுகங்கள் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரைஹனாவின் உதவியாளர் சாஜீத் இசை அமைக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

VTV 2 ஆம் பாகத்தில் நான் தான் ஜெஸ்ஸி - மேகா ஆகாஷ்


;