‘தல’யுடன் 100 நாட்கள்! - நடிகர் விதார்த்

 ‘தல’யுடன் 100 நாட்கள்! - நடிகர் விதார்த்

செய்திகள் 23-Jul-2013 10:34 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஆரம்பத்தில் சின்னச் சின்ன வேடங்களில் நடித்துக் கொண்டிருந்த நடிகர் விதார்த், பிரபுசாலமன் இயக்கிய ‘மைனா’ படம் மூலம் 2010ல் ஹீரோவாக அறிமுகமானார். அதன்பின்பு நடித்த படங்கள் அவருக்குப் பெரிதாகப் பேர் வாங்கிக் கொடுக்காத நிலையில், தற்போது ‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் அஜித்தின் 54வது படத்தில் தலயுடன் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அஜித்துடன் நடித்து வருவது பற்றிக் கூறிய நடிகர் விதார்த்,

‘‘எல்லோரும் சொல்ற மாதிரி அஜித் சாரின் மனிதநேயத்தை நான் நேரில் பழகி உணர்ந்துகொண்டேன். இந்தப் படம் இன்னும் 3 ஷெட்யூல் பாக்கியிருக்கு. அனேகமா நவம்பர் கடைசியில படப்பிடிப்பு முடிஞ்சிரும். இந்தப் படத்திற்காக கிட்டத்தட்ட 100 நாட்கள் ‘தல’யுடன் பழகியதை என்னால் மறக்கவே முடியாது. என்னோட ‘ஆள்’ படத்தின் டிரைலரைப் பார்த்துட்டு, ‘இந்தப் படம் கண்டிப்பா ஹிட்டாகும்’னு வேற அஜித் சார் பாராட்டியிருக்காரு... அதனால நான் அந்தப் படத்தை ரொம்பவே எதிர்பார்க்கிறேன்’’ என்று நெகிழ்ந்திருக்கிறார்.

அஜித்தின் 54வது படம், ‘ஆள்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து, தற்போது ‘பட்டையக் கிளப்பணும் பாண்டியா’ என்ற படத்திலும் நடித்து வருகிறார் விதார்த்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;