சிபியின் ‘நாய்கள் ஜாக்கிரதை’!

சிபியின் ‘நாய்கள் ஜாக்கிரதை’!

செய்திகள் 22-Jul-2013 4:06 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘நாணயம்’ படத்தை இயக்கிய சக்தி சௌந்தர் ராஜன் அடுத்து இயக்கும் படம் ‘நாய்கள் ஜாக்கிரதை’. ‘நாதாம்பாள் ஃபிலிம் ஃபேக்டரி’ என்ற நிறுவனம் சார்பாக நடிகர் சத்யராஜ் தயாரிக்கும் இப்படத்தில் முதல் ஹீரோவாக பயிற்சி பெற்ற இராணுவ புலனாய்வு நாய் ஒன்று நடிக்க, இரண்டாவது ஹீரோவாக சத்யராஜின் மகன் சிபி சத்யராஜ் நடிக்கிறார். ‘லீ’, ‘நாணயம்’ போன்ற பல படங்களில் நடித்த சிபி அப்படங்களைத் தொடர்ந்து கிட்டத்தட்ட இருநூறு கதைகளை கேட்ட பிறகு, அதில் ‘நாய்கள் ஜாக்கிரதை’ கதையை ஓகே செய்துள்ளார்.

வித்தியாசமான கதை பின்னணியில் உருவாக இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் கடைசியில் துவங்கவிருக்கிறது. இந்தப் படத்திற்கு ‘சித்து +2’, ‘போடா போடி’ போன்ற படங்களுக்கு இசை அமைத்த தரண்குமார் இசை அமைக்கிறார். படத்திற்கான கதாநாயகி, மற்ற நடிகர் - நடிகைகள் தேர்வு தற்போது நடந்து வருகிறது. இப்படம் பிரம்மாண்டமான முறையில் உருவாக இருக்கிறதாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எச்சரிக்கை - டிரைலர்


;