கமல் இயக்கத்தில் ‘பீட்சா’ ஹீரோயின்!

கமல் இயக்கத்தில் ‘பீட்சா’ ஹீரோயின்!

செய்திகள் 22-Jul-2013 1:19 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

தமிழ், மலையாளம், தெலுங்கு என நாற்பதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருப்பவர் ரம்யா நம்பீசன். விஜய்சேதுபதியுடன் ’பீட்சா’ படத்தில் நடித்து கலக்கியவருக்கு தொடர்ந்து பெயர் சொல்லும்படியான படங்கள் அமையவில்லை. ஏற்கெனவே தமிழில் கமிட் ஆன ‘முறியடி’, ‘ரெண்டாவது படம்’ ஆகிய படங்கள் திட்டமிட்டபடி வெளிவராத நிலையில், அம்மணிக்கு நல்ல ஒரு மலையாளப் பட வாய்ப்பு கிடைத்திருக்கிறது. சமீபத்தில் வெளியாகி தேசிய விருதுகள் உட்பட பல விருதுகளை அள்ளிய ‘செல்லுலாய்டு’ படத்தை இயக்கிய மலையாள இயக்குனர் கமல், அடுத்து இயக்கும் படம் ‘நடன்’.

மலையாள சினிமாவின் பிதாமகன் என்று அழைக்கப்படும் ஜே.சி.டானியலின் வாழ்க்கை வரலாறை ’செல்லுலாய்டு’ படமாக செதுக்கிய கமல் அடுத்து, ‘நடன்’ படத்தில் நாடக கலைஞர்களின் வாழ்க்கையைப் படம் பிடிக்க இருக்கிறார். இந்தப் படத்தில் ஜெயராம் நாடக நடிகராக நடிக்க, இவருக்கு ஜோடியாக நடிக்கிறார் ரம்யா நம்பீசன். இந்தப் படத்தில் நடிப்பது குறித்து ரம்யா நம்பீசன், ‘‘கமல் சார் இயக்கத்தில் நடிக்கும் இப்படம் எனது சினிமா வாழ்க்கையில் ஒரு மைல்கல்லாக இருக்கும்’’ என்று கருத்து தெரிவித்திருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சத்யா - டிரைலர்


;