சூப்பர் ஹீரோக்கள் இணையும் படம்!

சூப்பர் ஹீரோக்கள் இணையும் படம்!

செய்திகள் 22-Jul-2013 12:09 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஹாலிவுட் சூப்பர் ஹீரோக்களை வரிசைப்படுத்துங்கள் என்றால், பெரும்பாலானோர் சூப்பர்மேன், பேட்மேன் என்றுதான் வரிசைப்படுத்துவார்கள். இந்த இரண்டு ஹீரோக்களும் ஒரு படத்தில் இணைந்தால் எப்படி இருக்கும்? இந்த சிந்தனைக்கு வடிவம் கொடுப்பதில் இறங்கியுள்ளது ஹாலிவுட்டின் புகழ்பெற்ற ‘வார்னர் பிராஸ் நிறுவனம்’. இந்த இரண்டு ஹீரோக்களை ஒருங்கிணைத்து இயக்கவிருப்பவர் சமீபத்தில் வெளியாகிய ’மேன் ஆஃப் த ஸ்டீல்’ படத்தை இயக்கிய சாக் ஸ்னைடர்.

இவர் சமீபத்தில் இந்த புரொஜக்ட் குறித்து டுவீட் செய்து, படத்திற்கான லோகோவையும் வெளியிட்டுள்ளார். 2015ல் வெளியிட திட்டமிட்டு உருவாக்க இருக்கும் இப்படத்தில் தற்போதைய சூப்பர்மேன் வரிசை படங்களில் நடித்து வரும் ஹென்றி காவிலே சூப்பர் மேனாக நடிக்கிறார். ஆனால் ‘பேட்மேன்’ பட வரிசையில் கடைசி பேட்மேனாக நடித்த கிரிஸ்டன் பெயில் இனி தான் பேட்மேனாக நடிக்கப் போவதில்லை என்று அறிவித்திருப்பதால் பேட் மேனாக நடிக்க வேறு ஒருவரை தேடி வருகிறாராம் இயக்குனர் சாக் ஸ்னைடர்.

ஹாலிவுட்டில் தற்போது சூப்பர் மேனும், பேட்மேனும் இணைவதுதான் ஹாட் டாபிக் மேட்டராக பேசப்பட்டு வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;