‘பாக் மில்கா பாக்’ படத்துக்கு வரிவிலக்கு!

‘பாக் மில்கா பாக்’ படத்துக்கு வரிவிலக்கு!

செய்திகள் 22-Jul-2013 11:07 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

சமீபத்தில் வெளியாகி வசூலில் சாதனை படைத்துக் கொண்டிருக்கும் ஹிந்தி படம் ‘பாக் மில்கா பாக்’. புகழ்பெற்ற ஒலிம்பிக் ஓட்டப்பந்தய வீரர் மில்கா சிங்கின் வாழ்க்கையை பின்னணியாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் இது. இந்த படத்தில் மில்கா சிங்கின் கேரக்டரில் பர்ஹான் அக்தர் நடிக்க, இவருடன் பிரகாஷ் ராஜ், சோனம் கபூர் ஆகியோரும் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கின்றனர். ராகேஷ் ஓம் பிரகாஷ் இயக்கியிருக்கும் இப்படம் ஒரு பொழுதுபோக்கு படம் மட்டுமில்லாமல் இளைஞர்களிடையே விளையாட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் இருப்பதாக பல்வேறு அமைப்பினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதன் அடிப்படையில் இந்தப் படத்தை எல்லோரும் பார்க்க வேண்டும் என்ற நோக்கத்தோடு மகாராஷ்ட்ரா மாநில அரசு இப்படத்துக்கு ஆறு மாத காலத்துக்கு வரிவிலக்கு அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

களவாடிய பொழுதுகள் - டிரைலர்


;