நயன்தாராவின் புது ஜோடி!

நயன்தாராவின் புது ஜோடி!

செய்திகள் 22-Jul-2013 10:35 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஒரு வருடம் எந்தப் படமும் வரவில்லையென்றால் அந்த நடிகையை மறந்துவிட்டு, அடுத்த ‘கனவுக்கன்னி’யைத் தேடத் துவங்கிவிடுவார்கள் தமிழ் ரசிகர்கள். ஆனால், 2010ல் வெளிவந்த ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்திற்குப் பிறகு நயன்தாராவிற்கு வேறு எந்தத் தமிழ்ப் படமும் வரவில்லையென்றாலும், அவரை இன்னமும் ரசிகர்கள் வரவேற்கத் காத்திருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. இல்லையென்றால், அஜித்துடன் விஷ்ணுவர்தன் இயக்கும் படம், உதயநிதி ஸ்டாலினுடன் ‘இது கதிர்வேலன் காதல்’, ஆர்யாவுடன் ‘ராஜா ராணி’ என அடுத்தடுத்த படங்களுக்கு நயன்தாராவைத் தேடி இத்தனை வாய்ப்புகள் வந்திருக்குமா?

அஜித், ஆர்யா, உதயநிதிக்குப் பிறகு தற்போது இன்னொரு நாயகருடன் ஜோடி போட புதிய படமொன்றில் ஒப்பந்தமாகியிருக்கிறார் நயன்தாரா. அவர் வேறு யாருமல்ல, ‘பூலோகம்’, ‘நிமிர்ந்து நில்’ போன்ற படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் ஜெயம் ரவிதான். ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இப்படத்தை இயக்கப்போவது, ரவியின் அண்ணன் ‘ஜெயம்’ ராஜா! வரும் செப்டம்பரில் இருந்து படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

என் ஆளோட செருப்ப காணோம் - இரவில் பாடல் வீடியோ


;