திருப்பதி பிரதர்ஸின் விருது வேட்டை!

திருப்பதி பிரதர்ஸின் விருது வேட்டை!

செய்திகள் 22-Jul-2013 10:47 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

லிங்குசாமியின், ‘திருப்பதி பிரதர்ஸ்’ நிறுவனம் தயாரித்த ‘வழக்கு எண் 18/9’ மற்றும் ‘கும்கி’ ஆகிய படங்கள் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பு பெற்று வெற்றி பெற்றதோடு தேசிய விருதுகள் உட்பட பல விருதுகளையும் அள்ளியது. இந்த விருதுகள் மட்டுமின்றி சமீபத்தில் நடந்த 60வது ஃபிலிம் ஃபேர் விருது வழங்கும் விழாவில் ‘வழக்கு எண் 18/9’ சிறந்த படமாக தேர்வு பெற்று விருது பெற்றிருப்பதோடு, இந்தப் படத்தை இயக்கிய பாலாஜி சக்திவேலுக்கு சிறந்த இயக்குனருக்கான விருதும், ‘கும்கி’ படத்தின் இசை அமைப்பாளர் டி.இமான், பாடலாசிரியர் யுகபாரதி, சிறந்த குணச்சித்திர நடிகர் தம்பி ராமையா என மொத்தம் ஐந்து ஃபிலிம் ஃபேர் விருதுகள் கிடைத்திருக்கின்றன.

லாப நோக்கம் மட்டுமின்றி நல்ல தரமான படங்களையும் தரவேண்டும் என்ற ‘திருப்பதி பிரதர்ஸ்’ நிறுவனத்தின் எண்ணம் மற்ற தயாரிப்பாளர்களுக்கும் சிறந்த படங்களை எடுக்க வேண்டும் என்ற உற்சாகத்தைத் தரும்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மாவீரன் கிட்டு - இளந்தாரி பாடல் வீடியோ


;