‘தல’யின் 20 லட்ச ரூபாய் பைக்!

‘தல’யின் 20 லட்ச ரூபாய் பைக்!

செய்திகள் 22-Jul-2013 10:02 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

அஜித் என்றவுடன் ரசிகர்களுக்கு முதலில் நினைவுக்கு வருவது அவரின் ஸ்டைலிஷான ‘பைக் ரேஸிங்’ காட்சிகள்தான். அதிலும் ‘மங்காத்தா’ படத்தில் ‘சேஸிங்’ காட்சிகளில் அவர் வீலிங் செய்தபோது, மொத்த திரையரங்கமும் அதிர்ந்தது. அதேபோல் சமீபத்தில் வெளியான அஜித்தின் 53வது பட டீஸரிலும் ‘டுகாட்டி’ சூப்பர் பைக்கில் அஜித் வரும் காட்சிக்கு ‘செம’ ரெஸ்பான்ஸ்!. ‘பிரிக்க முடியாதது’ என்று கேட்டால் ‘அஜித்தும் பைக்கும்’ என்று சொல்லுமளவுக்கு வெறித்தனமான பைக் ரசிகர் அஜித்!

ஏற்கெனவே பல மாடல் சூப்பர் பைக்குகளை வைத்திருக்கும் அஜித், தற்போது புதிதாக ‘பி.எம்.டபிள்யூ எஸ்1000 ஆர்ஆர்’ பைக் ஒன்றை வாங்கியுள்ளார். ஸ்போர்ட்ஸ் பைக் மாடலான இது 1000 சிசி இன்ஜின் திறனைக் கொண்டது. இதோட விலை எவ்வளவு தெரியுமா? கிட்டத்தட்ட 20 லட்ச ரூபாயாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;