சிம்பு - ஹன்சிகா காதல் உண்மையா?

சிம்பு - ஹன்சிகா காதல் உண்மையா?

செய்திகள் 20-Jul-2013 3:08 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘வாலு’, ‘வேட்டை மன்னன்’ ஆகிய படங்களில் ஜோடியாக நடித்து வரும் சிம்புவுக்கும், ஹன்சிகாவுக்கும் இடையில் காதல் என்றும், விரைவில் இருவரும் திருமணம் செய்யவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாக அப்போது இதை சிம்புவோ, ஹன்சிகாவோ மறுக்கவில்லை. இது தொடர்பாக கருத்து தெரிவித்த சிம்புவின் தந்தை விஜய டி.ராஜேந்தர், ‘’என் மகன் யாரை திருமணம் செய்தாலும் நான் ஏத்துப்பேன், அது ஹன்சிகாவாக இருந்தாலும் சந்தோஷம்’’ என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் ஒரு பிரபல வார இதழில் ஹன்சிகாவின் பேட்டி வெளியாகியிருந்தது. இந்த பேட்டியில் , ’’நானும், சிம்புவும் நண்பர்கள்’’ என்று ஹன்சிகா கூறியிருந்துபோல் செய்தி வெளியாகியிருந்தது. ஆனால் அந்த பத்திரிகைக்கு அதுபோன்ற ஒரு பேட்டியை நான் கொடுக்கவில்லை என்று ஹன்சிகா சமீபத்தில் தனது டுவிட்டர் பக்கத்தில் எழுதி அந்த பேட்டிக்கு மறுப்பு தெரிவித்திருந்தார்.

அதனை தொடர்ந்து மேலும் பல வதந்திகள் பரவ, ஹன்சிகா தனது டுவிட்டர் பக்கத்தில், " எனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல்வேறு வதந்திகள் வந்து கொண்டிருக்கிறது. அதை நான் தெளிவுப்படுத்த விரும்புகிறேன். நான் சிம்புவை கவனிப்பது உண்மைதான். ஆனால் எனது சொந்த வாழ்க்கை குறித்து இப்போதைக்கு எதுவும் கூற முடியாது" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அதே சமயம் சிம்புவும் டுவிட்டரில், " நான் ஹன்சிகாவுடன் பழகிக் கொண்டிருப்பது உண்மைதான் . ஹன்சிகாவும் நல்லவிதமாக தான் பழகுகிறார். எங்கள் திருமணம் குறித்து குடும்பத்தினர் தான் முடிவு செய்ய வேண்டும். அதனால் எங்களுடைய தனிப்பட்ட விஷயங்களில் தலையிடாதீர்கள் " என்று பொருள்படும் படி கருத்து தெரிவித்திருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;