மில்காசிங், மேரி கோம்… அடுத்து அசாருதீன்!

மில்காசிங், மேரி கோம்… அடுத்து அசாருதீன்!

செய்திகள் 20-Jul-2013 2:40 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

பாலிவுட்டில் தற்போது விளையாட்டு வீரர்களின் கதைகளை படமாக்கும் சீஸன் போலும்! பிரபல ஓட்ட பந்தய வீரர் மில்கா சிங்கின் வாழ்க்கையை பின்னணியாக வைத்து எடுக்கப்பட்டு, தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘பாக் மில்கா பாக்’ படத்தைத் தொடர்ந்து பிரபல பாக்சிங் வீராங்கனை மேரி கோமின் வாழ்க்கை வரலாறும் படமாகிறது. இந்த படத்தில் ப்ரியங்கா சோப்ரா நடிக்க, ஒமாங் குமார் இயக்க இருக்கிறார்.

இந்த படத்தைத் தொடர்ந்து மற்றுமொரு விளையாட்டு வீரரின் கதை படமாக இருக்கிறது. ஒரு காலத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் திறமையான விளையாட்டு வீரராகவும், கேப்டனாகவும் திகழ்ந்தவர் முகமது அசாருதீன். ஒரு ஊழல் புகாரில் சிக்கிக்கொண்ட அசாருதீன் கிரிக்கெட்டிலிருந்து விலகி, அரசியலில் குதித்தார். இப்போது அரசியலில் ஈடுபட்டு வரும் அவரது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை வைத்து ஒரு படத்தை தயாரிக்க இருக்கிறார் பாலிவுட்டின் ஹிட் மேக்கர் என்று அழைக்கப்படும் ஏக்தா கபூர்.

இது சம்பந்தமான ஒப்பந்தம் சமீபத்தில் கையெழுத்தாகியுள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் துவங்கவிருக்கும் இப்படத்தில் ரன்பீர் கபூர், அல்லது சயிஃப் அலிகான் நடிக்கலாம என்று கூறப்படுகிறது. இப்படம் பிரம்மாண்டமான முறையில் உருவாக இருக்கிறதாம்

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;