தமன்னாவுக்கு பதில் ஸ்ருதிஹாசன்?

தமன்னாவுக்கு பதில் ஸ்ருதிஹாசன்?

செய்திகள் 20-Jul-2013 11:29 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

விஜயகாந்த் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி மாபெரும் வெற்றி பெற்ற ‘ரமணா’ படம் ஹிந்தியில் ரீ-மேக் ஆகிறது. சஞ்சய் லீலா பன்சாலி தயாரிக்கும் இந்த படத்தில் அக்ஷய்குமார் ஹீரோவாக நடிக்க, தமிழில் ‘வானம்’ படத்தை இயக்கிய கிரீஷ் இயக்குகிறார். இந்த படத்தில் அக்ஷய் குமாருக்கு ஜோடியாக தமன்னா நடிக்க இருப்பதாக முதலில் பேசப்பட்டது. ஆனால் தமன்னாவை விட இப்போது மார்க்கெட்டில் அதிக மவுசு உள்ள ஒரு நடிகை நடித்தால் நன்றாக இருக்கும் என்று கருதும் தயாரிப்பு தரப்பினர், இப்போது ஸ்ருதி ஹாசனிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம். ஸ்ருதி ஹாசன் நடித்த ‘டி-டே’ மற்றும் ‘ராமையா வாத்சாவய்யா’ ஆகிய ஹிந்தி படங்கள் சமீபத்தில் வெளியாகி பரவலான வரவேற்பை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பாகுபலி 2 - பலே பலே பாடல் வீடியோ


;