விஜய்க்காக அயராது உழைக்கும் ஜி.வி.!

விஜய்க்காக அயராது உழைக்கும் ஜி.வி.!

செய்திகள் 19-Jul-2013 4:38 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

விஜய்யுடன் முதல்முறையாக கைகோர்க்கும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார், விஜய் ரசிகர்களை வெகுவாகக் கவர வேண்டும் என்பதற்காக ‘தலைவா’ படத்தின் பின்னணிக்கு ஸ்பெஷலாக உழைத்துக் கொண்டிருக்கிறார். திருமணமான சிலநாட்களிலேயே ‘தலைவா’வுக்காக தன் பணிக்கு சீக்கிரம் திரும்பியுள்ள ஜி.வி., இப்படத்தின் பின்னணி இசை அமைப்பு பணியில் இரவு பகலாக படு பிசியாக இயங்கி வருகிறார்.

படத்தின் முதல் பகுதியின் வேலை முடித்த கையோடு, தற்போது இரண்டாம் பகுதியின் இசை கோர்ப்பு வேலைகளில் ஈடுப்பட்டிருப்பதாக தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். ஏ.எல்.விஜய் இயக்கத்தில், விஜய், அமலா பால் ஜோடியாக நடித்துள்ள இப்படம் அடுத்த மாதம் ரிலீசாகவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தடம் - teaser


;