பாக்ஸிங் கற்கும் ப்ரியங்கா சோப்ரா!

பாக்ஸிங் கற்கும் ப்ரியங்கா சோப்ரா!

செய்திகள் 19-Jul-2013 2:26 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

குத்துச் சண்டையில் ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் பெற்றவர் மேரி கோம். மணிப்பூரில் ஒரு நடுத்தர குடுபத்தில் பிறந்து தனது கடின முயற்சியால் படிபடியாக வளர்ந்து உலக அளவில் பாக்ஸிங்கில் புகழ்பெற்று விளங்கிய மேரி கோமின் வாழ்க்கையை மையமாக வைத்து பாலிவுட்டில் ஒரு படம் உருவாக இருக்கிறது. இந்தப் படத்தில் மேரி காமின் வேடத்தில் முன்னாள் உலக அழகியும், பாலிவுட்டின் பிரபல நடிகையுமான ப்ரியங்கா சோப்ரா நடிக்கிறார்.

இந்தப்படத்திற்காக கடுமையான பாக்ஸிங் பயிற்சிகளை எடுத்து வரும் ப்ரியங்கா, சமீபத்தில் மேரி காமை சந்திக்க மணிப்பூரிலுள்ள இம்ஃபால் நகருக்குச் சென்று அவருடன் ஒரு சில நாட்கள் தங்கி, பாக்ஸிங் சம்பந்தப்பட்ட விஷயங்களை விவாதித்து வந்துள்ளதோடு, மேரி காமின் பயிற்சியாளரையும் சந்தித்து ஆசி பெற்றுள்ளார். ப்ரியங்கா சோப்ரா, மேரி காமை சந்திக்க மணிப்பூர் சென்றிருந்தபோது அவருடன் படத்தின் இயக்குனர் ஒமாங் குமாரும் சென்றிருந்தார்.

தற்போது தினமும் எட்டு மணிநேரம் குத்துச்சண்டையில் பயிற்சி பெற்று வரும் ப்ரியங்கா, போதுமான பயிற்சி பெற்றதும் படத்தின் படப்பிடிப்பு துவங்குமாம். பெயரிடப்படாத இந்தப் படம் ப்ரியங்கா சோப்ராவின் கேரியரில் மிகப்பெரிய படமாக இருக்குமாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மேரி கொம் - டிரைலர்


;