பாகிஸ்தான் ‘பார்டரி’ல் சன்னி தியோல்!

பாகிஸ்தான் ‘பார்டரி’ல் சன்னி தியோல்!

செய்திகள் 19-Jul-2013 11:35 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

1997-ல் வெளிவந்து சூப்பர் ஹிட்டான ஹிந்தி படம் ‘பார்டர்’. சன்னி தியோல் ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தை ஜே.பி.தத்தா இயக்கியிருந்தார். 1971- ல் இந்திய - பாகிஸ்தான் இடையே நடந்த போர் சம்பவங்களை பின்னணியாக வைத்து உருவாக்கப்பட்டிருந்த இப்படம் வசூலில் பெரிய சாதனை படைத்ததோடு, இந்திய அளவில் ரொம்பவும் பேசப்பட்ட படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் இராணுவ அதிகாரியாக தோன்றி அதிரடி ஆக்‌ஷனில் கலக்கிய சன்னி தியோல் இப்படம் மூலம் புகழின் உச்சத்திற்கே சென்று விட்டார். ‘பார்டர்’ வெளியாகி பதினாறு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் இப்போது அதன் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது. முதல் ‘பார்டர்’ படத்தின் கதையின் தொடர்ச்சியாக உருவாக இருக்கும் இப்படத்திலும் சன்னி தியோலே ஹீரோவாக நடிக்க, முதல் பாகத்தை இயக்கிய ஜே.பி.தத்தாவே இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார்.

செப்டம்பர் மாதம் படப்பிடிப்பு துவங்கவிருக்கும் இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடந்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;