ஸ்ருதி vs ஸ்ருதி

ஸ்ருதி vs ஸ்ருதி

செய்திகள் 19-Jul-2013 11:13 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

தமிழில் ‘3’, ‘ஏழாம் அறிவு’ படங்களுக்குப் பிறகு வேறு படங்களில் நடிக்காவிட்டாலும், தெலுங்கிலும் ஹிந்தியிலும் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் நடிகை ஸ்ருதி ஹாசன். தெலுங்கில் அவர் நடித்த ‘கப்பார் சிங்’கும், ‘பலுபு’வும் சூப்பர் ஹிட்டாக தற்போது, ‘யவடு’, ‘ரேஸ் குர்ரம்’, ‘கப்பார் சிங் 2’, ‘ராமையா வஸ்தாவய்யா’ (தெலுங்கு படம்) ஆகிய படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

இதுதவிர, ஹிந்தியில் இவர் நடித்துள்ள இரண்டு படங்களும் இன்று (19-7-13) வெளியாகியிருப்பதில் ரொம்பவே குஷியாக இருக்கிறார் ஸ்ருதி. பிரபுதேவாவின் இயக்கத்தில் ‘ராமையா வஸ்தாவய்யா’ படமும், விலைமாதுவாக நடித்து பரபரப்பு கிளப்பிய ‘டி-டே’ படமும் இன்று ஒரே நேரத்தில் வெளியாகி மோதிக் கொண்டிருக்கின்றன.

இந்த இரண்டு படங்களில் ‘டி-டே’ படத்தின் ரிசல்ட்டைதான் ரொம்பவும் ஆர்வமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாராம் ஸ்ருதி. ஏனென்றால், தன் அப்பா கமலைப்போல் தைரியாமாக முடிவெடுத்து, இந்த விலைமாது கேரக்டரில் நடிக்க ஒப்புக்கொண்டாராம் ஸ்ருதி. அதோடு, தன் அழகைப் பற்றி கவலைப்படாமல் முகத்தில் பெரிய தழும்போடும் இந்தப் படத்தில் நடித்திருப்பதால், ரசிகர்களிடம் நிச்சயம் இந்த ‘சுரையா’ கேரக்டர் பேசப்படும் என பெரிய எதிர்பார்ப்பில் இருக்கிறார் ஸ்ருதி.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சி 3


;