சந்தானம் காட்டில் ‘பேய் மழை’!

 சந்தானம் காட்டில் ‘பேய் மழை’!

செய்திகள் 19-Jul-2013 10:42 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

வருடத்திற்கு வருடம் சந்தானம் நடிக்கும் படங்களின் எண்ணிக்கை ஏறிக்கொண்டே போகிறது. சென்ற 2012ல் மட்டும் சந்தானம் நடிப்பில் 13க்கும் மேற்பட்ட படங்கள் வெளிவந்து, சந்தானம் இல்லாத தமிழ்ப்படம் இல்லை என்று சொல்லும் அளவுக்கு எங்கும் நீக்கமற நிறைந்திருந்தார். அந்த சாதனை இந்த வருடமும், தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அடுத்த வருடத்திற்குமான கணக்கையும் இப்போதே தொடங்கிவிட்டார்.

இதுவரை இந்த 2013ல் ‘அலெக்ஸ்பாண்டியன், கண்ணா லட்டு தின்ன ஆசையா, சேட்டை, தீயா வேலை செய்யணும் குமாரு, தில்லுமுல்லு, சிங்கம் 2’ என 6 படங்கள் வெளியாகியுள்ளன. இதுதவிர, ‘பட்டத்து யானை, தலைவா, 555, மத கஜ ராஜா, யா யா, என்றென்றும் புன்னகை, வணக்கம் சென்னை, ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை’ ஆகிய படங்கள் உட்பட 10த்திற்கும் மேற்பட்ட படங்கள் சந்தானம் நடிப்பில் இந்த வருடம் திரைக்கு வர இருக்கிறது. இதில் வருகிற 26ம் தேதி வெளியாகவிருக்கும் விஷாலின் ‘பட்டத்து யானை’ படத்தில் பூங்காவனம் / கௌரவம் என முதல்முறையாக இரட்டை வேடத்தையும் போட்டிருக்கிறாராம் சந்தானம்.

வெளியாகவிருக்கும் இந்தப் படங்களைத் தவிர்த்துவிட்டு சந்தானம் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் படங்களை மட்டும் எண்ணினாலே, அந்த லிஸ்ட்டும் 12க்கு மேல் நீண்டுகொண்டே செல்கிறது. ‘பூலோகம்’, ‘இது கதிர்வேலன் காதல்’, ‘வாலு’, ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’, ‘ராஜா ராணி’, ‘வேட்டை மன்னன்’, ‘இங்க என்ன சொல்லுது’, ஷங்கரின் ‘ஐ’, அஜித்தின் பெயரிடப்படாத 54வது படம், ‘வாலிப ராஜா’, ‘வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்’, ‘நம்பியார்’ என பட்டியல் வளர்ந்து கொண்டே சந்தானம் வீடுவரைக்கும் செல்கிறது. இது நம்முடைய கணக்கு மட்டுமே இன்னும் நமக்குத் தெரியாமல், ஏன் அவருக்கே தெரியாமல் எத்தனை படங்களில் சந்தானம் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பதற்கு சரியான புள்ளிவிவரங்கள் கிடைக்கவில்லை!

‘அடை மழை’ன்னு சொல்வாங்க... ஆனா, இதெல்லாம் பார்க்கும்போது உண்மையிலேயே சந்தானம் காட்டில் ‘பேய் மழை’ன்னுதான் சொல்லணும்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சக்க போடு போடு ராஜா - டிரைலர்


;