நித்யா மேனனால் சஸ்பெண்டு ஆன பைலட்டுகள்!

நித்யா மேனனால் சஸ்பெண்டு ஆன பைலட்டுகள்!

செய்திகள் 19-Jul-2013 10:32 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘வெப்பம்’, ‘180’ போன்ற பல தமிழ் படங்களிலும், ஒரு சில மலையாள படங்களிலும் நடித்தவர் நித்யா மேனன். இவர் சமீபத்தில் பெங்களூரில் இருந்து ஹைதராபாத்திற்கு ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்தார். அப்போது அவரை விமானி அறைக்குள் உட்கார்ந்து பயணம் செய்ய விமானிகள் அனுமதித்துள்ளனர். கடந்த மாதம் நடந்த இந்த சம்பவம் இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இந்திய விமானப் போக்குவரத்து இயக்குனரகத்தால் அனுமதிக்கப்பட்டவர்கள் மட்டுமே விமானி அறைக்குள் நுழையவும் முடியும், அமர்ந்து பயணம் செய்யவும் முடியும். இந்த சட்டவிதிகளையெல்லாம் மீறி நடிகை நித்யா மேனனுக்கு விமானி அறைக்குள் நுழைய அனுமதி கொடுத்த, இரண்டு பைலட்டுகளை நிர்வாகம் சஸ்பெண்டு செய்துள்ளது.

அத்துடன் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதுபோன்ற விதிமீறல்கள் அடிக்கடி நடைபெறுவதால் விமானப் போக்குவரத்து நிர்வாகம் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது. அதனால் இந்த விசாரணை வளையத்திற்குள் நடிகை நித்யா மேனனும் வரலாம் என்பதால் சினிமா உலகில் பரபரப்பு கிளம்பியுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்சல் - டீசர்


;