விடுதலைப்புலிகளுக்கு எதிரான படமா ‘மெட்ராஸ் கஃபே’?

விடுதலைப்புலிகளுக்கு எதிரான படமா ‘மெட்ராஸ் கஃபே’?

செய்திகள் 18-Jul-2013 5:04 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஜான் ஆப்ரகாம் ஹீரோவாக நடித்து, தயாரித்துள்ள ஹிந்திப் படம் ‘மெட்ராஸ் கஃபே’. இப்படத்தின் ஷீட்டிங் முடிந்து, போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்துவர, படத்தை அடுத்த மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்கள்.

தமிழக, இலங்கை அரசியல் கலந்த கதையாக உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் விடுதலை புலிகளை தீவிரவாதிகளாக தவறாக சித்தரித்திருக்கிறார்கள் என்றும், இதனால் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் இயக்குனர் சீமான் சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் மனு அளித்துள்ளார்.

இதே போல் இந்தப் படத்தை தடை செய்ய வேண்டும் என்று கோரி, தமிழீழ மாணவர்கள் கூட்டமைப்பும் சென்னை காவல்துறை ஆணையரிடம் மனு கொடுத்துள்ளது. முதலில் 'ஜாஃப்னா' என்று பெயர் வைத்திருந்த இப்படத்தினை ஷூஜித் சிர்கார் இயக்கியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அவள் - டிரைலர்


;