ரிலீஸ் தள்ளிப்போகும் படங்கள்?

ரிலீஸ் தள்ளிப்போகும் படங்கள்?

செய்திகள் 18-Jul-2013 4:25 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

இந்த மாதத்தின் முதல் வாரத்தில் வெளியான 'சிங்கம் 2' வசூலில் தொடர்ந்து சாதனை படைத்து வரும் நிலையில், தனுஷின் 'மரியான்' நாளை ரிலீஸாகிறது. ‘பட்டத்துயானை’, ‘சொன்னா புரியாது’ ‘தங்கமீன்கள்’, ‘பொன்மாலைப்பொழுது’ ஆகிய படங்கள் ஜூலை 26 -ஆம் தேதி ரிலீஸாக இருந்தது.

‘தங்க மீன்கள்’, ‘பொன்மாலைப்பொழுது’ இந்த இரண்டு படங்களுமே, பெரிய நட்சத்திரங்களோ, பெரிய பட்ஜெட்டிலோ எடுக்காத, வித்தியாசமான மெல்லிய பாசம், காதலை கொண்ட படங்களாக இருப்பதால் இந்த படங்கள் தனியாக வெளிவரும் நேரத்தில் தான் முறையாக ரசிகர்களை சென்றடைந்து, வரவேற்பு கிடைக்கும்.

எனவே இந்த இரண்டு படங்களையும் ஆகஸ்ட் மாதத்தில் ‘தலைவா’ படத்தின் வெளியீட்டுக்குப் பிறகு வெளியிடுமானால் அதுவே நன்றாக இருக்கும் என்று விநியோகஸ்தர்கள் விரும்புவாதாக கோடம்பாக்கத்தில் பேசப்பட்டது. இப்போது அவர்களது விருப்பத்திற்கேற்ப ‘தங்க மீன்கள்’ மற்றும் ‘பொன்மாலைப் பொழுது’ ஆகிய படங்களின் ரிலீஸை தள்ளி வைத்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

VTV 2 ஆம் பாகத்தில் நான் தான் ஜெஸ்ஸி - மேகா ஆகாஷ்


;