மரியானுடன் மோதும் ஏழு படங்கள்!

மரியானுடன் மோதும் ஏழு படங்கள்!

செய்திகள் 18-Jul-2013 1:16 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஒரு காலத்தில் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் தான் அதிரடியாக அதிக எண்ணிக்கையில் படங்கள் ரிலீஸாகும். ஆனால் தற்போது அந்த நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. தரமான எந்த மொழிப் படமானாலும் சரி, அதை வரவேற்க எப்போதும் ரெடியாக இருக்கிறார்கள் ரசிகர்கள். அந்த வகையில் நாளை ’மரியான்’ படத்துடன் ‘கெவு கேகா’, ‘ஓம் (3டி)’ என்ற இரண்டு தெலுங்கு படங்களும், ‘ராமையா வத்சாவய்யா’, ‘டி-டே’ என்று இரண்டு ஹிந்தி படங்களும், ‘டர்போ (3டி)’, ‘ஒயிட் ஹவுஸ் டவுன்’, ‘ரெட் 2’ என மூன்று ஆங்கிலப் படங்களும் வெளியாகவிருக்கின்றன!

இந்தப் படங்களில் ‘மரியான்’ மற்றும் ‘டர்போ’ ஆகியவை ‘ஆரோ 3டி’ தொழில்நுடபத்தில் உருவாகிய படங்கள் என்ற சிறப்புக்களோடு வெளியாக இருக்கிறது என்றால், நம்ம ஊர் பிரபலம் பிரபுதேவா இயக்கியிருக்கும் ஹிந்தி படம் என்ற பெருமையோடு ‘ராமய்யா வாத்சாவய்யா’ ரிலீஸாக இருக்கிறது. இது தவிர, ‘ராமையா வத்சாவய்யா’, ‘டி-டே’ படங்களில் நம்ம ஊர் ஸ்ருதி ஹாசன் தான் ஹீரோயினாக நடித்திருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் ‘டி-டே’ படத்தில் ஸ்ருதி ஹாசன் விலைமாதுவாக நடித்திருக்கிறார் என்ற செய்திகள் வந்து பரபரப்பை கிளப்பியிருப்பதால் இந்தப் படத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலாய் காத்திருக்கிறார்கள் என்ற ஸ்பெஷலும் உண்டு! இந்தப் படங்களில் எந்தெந்த படங்கள் ரசிகர்களைக் கவர்ந்து பாக்ஸ் ஆபீசில் பட்டையைக் கிளப்பும் என்பது ஓரிரு நாட்களில் தெரிந்து விடும்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எனை நோக்கி பாயும் தோட்டா - விசிறி ஆடியோ பாடல்


;